மாப்படுகை ஊராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்க விவசாயி நூதன பிரச்சாரம்

மாப்படுகை ஊராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்க விவசாயி நூதன பிரச்சாரம்
X

வீடுதோறும் காலி விழுந்து நூதன பிரச்சாரம் செய்யும் விவசாயி ராமலிங்கம்.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க விவசாயி வீடுதோறும் நூதன பிரச்சாரம் செய்கிறார்.

மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை வகை பிரித்து வழங்க பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு சார்பில் ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் என்னவோ குப்பைகளை அவ்வாறு வகை பிரிக்காமல் தூய்மைப் பணியாளரிடம் மொத்தமாக கொடுத்து விடுகின்றனர்.

இதனால் இதனை மொத்தமாக சேகரித்து சென்று தூய்மைப் பணியாளர்கள் குப்பை கிடங்கில் வைத்து பிரித்தெடுப்பது என்பது பெரும் சிக்கலான ஒன்றாக இருந்து வருவது மட்டும் இன்றி அவைகள் பெரும் மலைபோல் மாறி அவ்வப்போது தீ பிடித்து எரியும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.

இந்நிலையில் மாப்படுகை ஊராட்சியில் அப்பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் மேலும் சில விவசாயிகள் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகள்தோறும் சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து வழங்க வலியுறுத்தி, பொதுமக்களின் கால்களில் விழுந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் அவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் மக்கும் குப்பைகளை வயலுக்கு இயற்கை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை, பிளாஸ்டிக் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் ஆலைகளில் அதனை பயன்படுத்த விற்பனை செய்து அதில் வரும் வருவாயில் ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என எடுத்துக் கூறினார்.

தூய்மை பணியாளர்களுடன் இயற்கை விவசாயி பொதுமக்களின் கால்களில் விழுந்து குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் அவசியத்தை எடுத்துக் கூறிய சம்பவம் ஊராட்சி மக்களிடையே நெகிழ்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்த துவங்கியுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil