மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம்

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம்
X

சீர்காழியில் ரத்ததான முகாம் நடந்தது.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். சீர்காழி வட்டார வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி முகாமை துவக்கி வைத்து ரத்த தானம் செய்தார். இம்முகாமில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லா மேக், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது