மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்

மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்
X

முன்களப்பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டைகளை வழங்கிய, மயிலாடுதுறை பாஜகவினர் 

மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டையை மயிலாடுதுறையில் நகர பாஜக நிர்வாகிகள் வழங்கினர்.

கொரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கியது முதல், இந்நாள் வரை மக்களைக் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களின் அயராத உழைப்பையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி, உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர்.

அவர்களின் சேவையை போற்றியும், இந்திய மக்களுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி சாதனைப் படைத்ததற்கு மருத்துவக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை, சென்னை கமலாலயத்தில் இருந்து பாஜக நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் இந்த வாழ்த்து அட்டைகளை, நகர பாஜக தலைவர் மோடி.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோருக்கும், போலீஸார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், எரிவாயு தகனமேடை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கி, இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!