வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து முகவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து முகவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
X

குத்தாலம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகளுக்கும் முகவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து முகவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் வழங்கப்பட்டிருந்த 21 தபால் வாக்குகளில் 16 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதில் கெசட்டட் ஆபீசரின் கையெழுத்து இல்லை என ஒரு வாக்கினை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி முகவர்களும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதைத்தொடர்ந்து மணல்மேடு, தரங்கம்பாடி, வைதீஸ்வரன்கோயில் பேரூராட்சிகளுக்கு பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!