கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த எலுமிச்சம்பழம் பறிமுதல்

கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த எலுமிச்சம்பழம் பறிமுதல்
X

கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட எலுமிச்சை பறிமுதல் செய்யப்பட்டது

மயிலாடுதுறை மார்க்கெட்டில் கார்பைட் கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ எலுமிச்சம்பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தார்

தமிழகத்தில் எலுமிச்சை விளைச்சல் குறைவாக உள்ளது. ஆனால் கோடை காலம் என்பதால் மக்கள் அதிகளவு எலுமிச்சையை உபயோகப்படுத்தி வருகின்றனர். ஜூஸ் கடைகளில் எலுமிச்சை ஜூசுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுவருகிறது. இதனால் மழை காலத்தில் ரூ.1க்கு விற்ற எலுமிச்சம்பழத்தின் விலை தற்போது உச்சத்துக்கு சென்றுள்ளது. தற்போது ஒரு எலுமிச்சம் பழம் ரூ.20 வரை விற்பனையாகிறது. தற்போது கிராக்கி ஏற்பட்டதால் சில வியாபாரிகள் எலுமிச்சை பிஞ்சுகளை பறித்துவந்து அவற்றை கார்பைட் கல்லை கொண்டு பழுக்க வைத்து ரூ.10, ரூ.15க்கு விற்று வந்தனர்.

மயிலாடுதுறை காய்கறி மார்க்கெட்டில் கார்பைட் கல்லால் பழுக்க வைத்து எலுமிச்சம் பழங்களை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது ரவிச்சந்திரன் என்பவரின் கடையில் கார்பைட் கல்லால் பழுக்க வைத்து விற்பனைக்காக எலுமிச்சம் பழங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 100 கிலோ எடை கொண்ட எலுமிச்சம் பழங்களை பறிமுதல் செய்ததுடன் ரவிச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுபோன்று கார்பைட் கல்லால் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture