சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு

வைத்தீஸ்வரன் கோவிலில் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் நடத்திய கொடி அணிவகுப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சீர்காழி காவல்துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு வைத்தீஸ்வரன் கோவில் பேருந்துநிலையத்தில் துவங்கி மேல வீதி, கீழவீதி, சன்னதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.
தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பில் சீர்காழி கோட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகள் சிறப்பு காவல் படையினர், கமாண்டோ படையினர், காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu