சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கொடிநாள் பேரணி- மாணவர் பங்கேற்பு

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கொடிநாள் பேரணி- மாணவர் பங்கேற்பு
X

சீர்காழியில் நடைபெற்ற கொடிநாள் பேரணி.


சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில், கொடி நாள் பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் கொடி நாள் பேரணி நடைபெற்றது. தாசில்தார் சண்முகம் வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் சாமி.செழியன் முன்னிலை வைத்தனர். கோட்டாட்சியர் நாராயணன் சீர்காழி டிஎஸ்பி ஆகியோர், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணியில், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியானது புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில் சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், விஜயராணி, வருவாய் ஆய்வாளர் பொன்னி பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!