சுருக்குமடி வலையை தடை செய்ய மீனவ பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் முடிவு
தரங்கம்பாடியில் மீனவ பஞ்சாயத்தார்களின் கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் திருமண மண்டபத்தில் சுருக்குமடிவலை, இரட்டைமடிவலை, அதிவேக என்ஜின் ஆகியவற்றை முற்றிலுமாக தடை செய்வது குறித்து மாவட்ட அளவிலான மீனவ பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தரங்கம்பாடி, குட்டியா ண்டியூர், சின்னங்குடி, வானகிரி, வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை உள்ளிட்ட 18 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை, அதிவேக இன்ஜின்கள் ஆகிய மூன்றையும் முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரை சந்திப்பதற்கு அனுமதி பெறுவதற்கு அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துவது, மத்திய மீன்வள துறை இணை அமைச்சரை சந்தித்து சுருக்குவலையை தடை செய்ய வலியுறுத்துவது, அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடிவலைக்கு அனுமதி வழங்கினால் அனைத்து மாவட்ட மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து பெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu