பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறை ஆணையர் ஆய்வு

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறை ஆணையர் ஆய்வு
X

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறை ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் நேரில் ஆய்வு செய்த காட்சி.

சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறை ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.140 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம், மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. இத் துறைமுகத்தின் மூலம் நாள்தோறும் 5 ஆயிரத்திகும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, நாட்டு படகுள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், இன்று துறைமுகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கை குறித்து நேரில் கேட்டறிந்தார். அப்பொழுது துறைமுகத்தில் படகு நிறுத்தும் தளத்தை 200 மீட்டர் நீட்டிக்கவும், முகத்துவாரம் மற்றும் துறைமுக பகுதிகளை தூர்வாரி சீரமைக்கவும், மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்