மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்
X

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து பையில் போட்டனர்.

மயிலாடுதுறை செங்கமேட்டு தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவரது வீட்டில் இரவு நாலரை அடி நீளமுள்ள நல்லபாம்பு கொல்லை பகுதியில் இருந்து வீட்டு சமையல் கூடத்திற்குள் புகுந்தது. பாம்பை கண்ட குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடினர்.

உடனடியாக மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் வந்த தீயணைப்புதுறை வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை லாவகமாக பிடித்து சாக்கில் கட்டினர். பிடித்த பாம்பை காட்டில் விடுவதற்காக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினரிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்படும் என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future