சீர்காழியில் கூரை வீடு தீயில் எரிந்து சேதம்

சீர்காழியில் கூரை வீடு தீயில் எரிந்து சேதம்
X

சீர்காழியில் கூரை வீடு தீபிடித்து எரிந்தது. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சீர்காழியில் கூரை வீடு தீபிடித்து எரிந்தது. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம். இவர் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். செல்வம் மனைவி சாந்தி வீட்டில் சமையல் வேலை செய்யும் போது காற்று பலமாக வீசியதால், அடுப்பிலிருந்து தீ காற்றில் பரவி வீட்டின் கூரை தீ பற்றியது. தீயை அணைப்பதற்குள் மேற்கூரை முழுவதுமாக மளமளவென்று தீ பற்றி எரிய தொடங்கியது.

இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஒரு லட்சம் மதிப்பிலான கூரை வீடு முழுமையாக சேதம் அடைந்தது.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!