தரங்கம்பாடியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சாரம்

தரங்கம்பாடியில் அ.தி.மு.க.  வேட்பாளர்களை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சாரம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், பொறையார், கேசவன்பாளையம், விநாயகர்பாளையம், ஒழுகைமங்கலம் உள்ளிட்ட 15 வார்டுகளுக்கும் வேட்பாளர்களுடன் சென்று ஆதரவாளர்கள் புடைசூழ வீடுவீடாக துண்டுப்பிரசுரம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொது மக்கள் உற்சாகத்துடன் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இதில் தரங்கம்பாடி பேரூராட்சி செயலாளர் , ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களிடம் அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
ai future predictions astrology