மயிலாடுதுறையில் போலீஸ் மீது போடப்பட்ட வழக்கை நேரடியாக விசாரிக்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நாடார் மக்கள் பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 12-ஆம் தேதி சாதி பெயரை சொல்லி திட்டியதாக சீர்காழி ஈசானியத் தெருவைச் சேர்ந்த ஆர்.பாபு, போலீஸ்காரர் டி.தனசேகர் ஆகிய இருவர்மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை காவல்துறை உயரதிகாரிகள் நேரடி விசாரணை நடத்த வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட 100க்கும் நாடார் சமுதாய மக்கள் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் நாடார் மக்கள் பேரவை நிறுவனர் ஏ.பி.ராஜா தலைமையில் புகார் மனு அளித்தனர்.
மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும், பணம் தரவில்லை என்றால் அவர்கள்மீது சாதியைச் சொல்லி திட்டியதாக பொய்யான புகார் அளித்து, அந்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கேட்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அக்.5-ஆம் தேதி சீர்காழி பேருந்து நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுபடப் போவதாக அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu