குத்தாலத்தில் பெண் ஒப்பந்த தொழிலாளி தற்கொலை முயற்சி

குத்தாலத்தில்  பெண் ஒப்பந்த தொழிலாளி தற்கொலை முயற்சி
X

மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வரும் நதியா

குத்தாலம் பேரூராட்சி பெண் ஒப்பந்த தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, ஜெயா, வேம்பு ,ராதிகா ஆகிய நான்கு பேர் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பரப்புரையாளர்கள் ஆக வேலை பார்த்து வந்தனர்..

வீடுகள் தோறும் சுகாதார பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து பேரூராட்சிக்கு தகவல் சொல்வது, வீடுகள்தோறும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்துச் சொல்வது போன்ற வேலைகள் இவர்களது பணிகளாகும்.

கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த நான்கு பேரும் வேலையை விட்டு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நதியா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில்; சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags

Next Story
ai future project