நிலக்கடலையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யுங்க விவசாயிகளே

நிலக்கடலையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யுங்க விவசாயிகளே
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடைலைகளை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்து அதிக லாபம்பெற வாங்க விவசாயிகளே என அழைப்பு விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் திருக்கடையூர், காழியப்பநல்லூர், டி.மணல்மேடு, மாமாகுடி, காலமநல்லூர், பிள்ளைபெருமாநல்லூர், மாணிக்கப்பங்கு, தலைச்சங்காடு, தில்லையாடி, மருதம்பள்ளம், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் விவசாயிகள் சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.

மணல்சாரி பகுதியான இங்கு தெளிப்புநீர் பாசனம் மூலம் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் தெளிப்புநீர் கருவிகளை வழங்கியுள்ளனர்.

சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம், கார்த்திகைப்பட்டம் ஆகிய 3 போகம் நடைபெறும் கடலை சாகுபடியில் தற்போது கார்த்திகைப் பட்டத்துக்கான அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நிலக்கடலையை இதுவரை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், செம்பனார்கோவில், குத்தாலம், சீர்காழி வட்டார அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து, சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்வதன் மூலம் இதுவரை ஈட்டிவந்த லாபத்தைவிட கணிசமான லாபத்தை பெறலாம் என்பதை விளக்கி, துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

மேலும், விவசாயிகள் தங்கள் விலை பொருட்களான நெல், பயறு, எள், தேங்காய் போன்றவற்றையும் விற்பனை கூடங்களுக்கு கொண்டுவந்து நல்ல விலைக்கு விற்பனை செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்