கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரலாறு காணாத கனமழையால் கொள்ளிடம் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து சம்பா பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்,கடந்த 2020-21 ஆம் ஆண்டுக்கான விடுபட்ட அனைவருக்கும் பயிர் காப்பீடு முழுமையாக வழங்க வேண்டும், கனமழையால் வேலைவாய்ப்பை இழந்து வாடும் விவசாய தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், கன மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு தமிழக அரசுக்கு கோரிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும், அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், கோமாரி நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும் அனைத்து கிராம பகுதிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்களாக எழுப்பினர்.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!