ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க குன்னம் பகுதி விவசாயிகள் கோரிக்கை

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க குன்னம் பகுதி விவசாயிகள் கோரிக்கை
X

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களுடன் விவசாயிகள்.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்டம் குன்னம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த குன்னம் கிராமத்தில் 200 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக அடுத்தடுத்து பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. விவசாயிகள் உரங்கள் இட்டும் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்றி வந்த நிலையில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது பெய்த தொடர் கனமழையால் 200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது.

இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியிலுள்ள விளை நிலங்களில் இருந்து மழை நீர் வெளியேறும் வடிகால் கிளை வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாததே என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரும் பணிகளின் போது பிரதான ஆறு மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பொதுப்பணித்துறையினர் விளைநிலங்களை ஒட்டியுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வாருவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழை நீர் சூழ்ந்து தங்கள் சாகுபடி பாதிக்கப்பட்டு தொடர் இழப்புகள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேனை தெரிவிக்கின்றனர். பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் கூட பிரதான சாலையிலேயே பார்த்து விட்டு செல்கின்றனர் தங்களது பகுதி பாதிப்புகளை பார்ப்பதற்கு கூட எந்த அதிகாரிகளும் வருவதில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது பத்து நாட்களுக்கும் மேலாக தண்ணீரில் மூழ்கியதால் சம்பா பயிர்கள் முற்றிலுமாக அழுகியுள்ளது என தெரிவிக்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் வரும் காலங்களிலாவது விளைநிலங்களை ஒட்டி அமைந்துள்ள கிளை வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும் எனவும் குன்னம் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்