சீர்காழி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கினார்

சீர்காழி அருகே குளத்தில்  குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கினார்
X

குளத்து நீரில் மூழ்கிய விவசாயி பத்மநாபன்.

சீர்காழி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கியதால் உடலை தேடும் பணி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது55 )விவசாயி.இவர் குடும்பத்துடன் அருகில் உள்ள திருப்பாற்கடல் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது பத்மநாபன் நீரில் முழுகி மாயமானார். உறவினர்கள் தகவலின்பேரில் பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பூம்புகார் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் குளத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவெண்காடு காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சீர்காழி தீயணைப்பு மீட்பு துறையினரும் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது. வட்டாட்சியர் சண்முகம் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்த தீயணைப்பு துறையினருக்கு உத்தரவிட்டனர். அதன்படி தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.விவசாயி மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ai marketing future