டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
X
மயிலாடுதுறையில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் மயிலாடுதுறை நகரத்திலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள மருந்து இடு பொருள் வேண்டாம் என்றும் சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும்,

சம்பா அறுவடையின்போது அருவை இயந்திரத்திற்கு தமிழக அரசு டீசலை மானியத்தில் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், கோடைகாலத்தில் வாய்க்கால் வெட்டும் போதும், அரசு டெண்டர் விடும் போதும் 2 விவசாயிகளை நியமித்து முறைகேடு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்