மயிலாடுதுறையில் மண்பானையில் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் மண்பானையில் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
X

மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

மயிலாடுதுறையில் மண்பானையில் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்த மளிகைப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்க வழிசெய்யும் இத்திட்டத்தில் மகளிர் குழு உறுப்பினர்கள் நுகர்வோருக்கு தவணை முறையில் மளிகைப் பொருட்களை விற்று நிரந்தர வருமானம் காண்கின்றனர்.

விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், நுகர்வோர் ஆகிய மூன்று தரப்பினருக்கும் லாபம் ஈடுபட்டும் வகையில் ஏற்படுத்தப்பட்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், நிறுவன இயக்குநர் மாணிக்கம் விவசாயிகள், மகளிர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மண்பானையில் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழாவைக் கொண்டாடினர். பொங்கல் பரிசு தொகுப்பாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
the future of ai in healthcare