/* */

யானை நண்பனை பிரிந்த அப்பு நாய் மீண்டும் சந்தித்தபோது...

யானை நண்பனை பிரிந்த அப்பு நாய்   மீண்டும் சந்தித்தபோது...
X

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை. அங்கு அப்பு என்கிற நாயும் உள்ளது. இருவரும் நல்ல நண்பர்கள். பகல் நேரங்களில் அபயாம்பிகையோடு அப்பு விளையாடி மகிழ்வது வழக்கம். இந்த நிலையில் அபயாம்பிகை யானைகள் நலவாழ்வு முகாமுக்கு சென்றுவிட்டது. யானை நண்பனை காணாது அப்பு நாய் தவியாய் தவித்து வந்தது. தினமும் யானை கட்டி இருக்கும் இடத்தை பார்த்து கவலையோடு படுத்துக் கிடந்தது.

தமிழக அரசின் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமுக்கு கடந்த மாதம் 6-ம் தேதி மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாயூரநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் தேக்கம்பட்டியில் 48 நாட்கள் முகாமில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் வனப்பகுதியில் வலம் வந்த யானை, முகாம் நிறைவடைந்து நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வந்தடைந்தது.

கோயிலுக்கு வந்த யானைக்கு இந்து அறநிலையத்துறை மயிலாடுதுறை ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கோயிலுக்கு வந்த அபயாம்பிகை யானையை வரவேற்று அப்பு நாய் சுற்றி சுற்றி வந்து மகிழ்ச்சி அடைந்தது. மெல்லிய குரல் எழுப்பி அதன் பிரிவினால் ஏற்பட்ட வலியை உணர்த்தியது.

கோயில் உள்ளே சென்ற யானையின் பின்னாலேயே ஓடியது. யானைக்கு பூஜை செய்த போதும் யானையை சுற்றியே வலம் வந்து உற்சாகமடைந்து. மயூரநாதர் கோயில் யானைப்பாகன் செந்தில் வீட்டில் அந்த அப்பு நாய் ஏழு வருடங்களாக வசித்து வருவதாகவும், யானையுடன் நட்பாக பழகி வந்ததாகவும் கூறினார். யானை முகாமுக்கு சென்று 48 நாட்களுக்கு பிறகு திரும்பி வந்த யானை அபயாம்பிகை கண்டு சந்தோசம் அடைந்ததாக யானைப்பாகன் செந்தில் தெரிவித்தார்.

மேலும் யானைக்கு போடும் பிஸ்கட்டை சாப்பிடுவதையும் நாய் அப்பு வாடிக்கையாக வைத்துள்ளது. பிற நாய்கள் யானையின் அருகே சென்றால் அடித்து விரட்டிவிடும், ஆனால், அப்புவை கண்டால் பாசமுடன் விளையாடும் என்று யானைப்பாகன் செந்தில் தெரிவித்தார். கோயிலுக்கு வந்த யானையை ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். யானை அபயாம்பிகை நாய் அப்புவின் நட்பு பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 March 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!