மயிலாடுதுறை இந்து மக்கள் கட்சி வேட்பாளர் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை  இந்து மக்கள் கட்சி வேட்பாளர் தர்ணா போராட்டம்
X
முன்னால் வந்த தன்னை வேட்பு மனு தாக்கல் செய்ய அழைக்காததை கண்டித்து வேட்பாளர் தர்ணா போராட்டம் செய்தார்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பாக போட்டியிட ராமதாஸ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார். உடன் மாநில செயலாளர் கொள்ளிடம் சாமிநாதன், மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருந்த வேட்பாளர் ராமதாசை அழைக்காமல், அவருக்கு பின்னால் வந்த வேட்பாளரை வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் செய்ய அழைத்ததன் பேரில் உள்ளே சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜியிடம் வேட்பாளர் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து இன்று கடைசி நாள் என்பதால் காத்திருந்த வேட்பாளர்கள் அனைவருக்கும் வருவாய்த்துறை சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்