பாமக., தேர்தல் பிரச்சார வாகனம் பறிமுதல்
மயிலாடுதுறை தொகுதியில் அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பா.ம.க பிரசார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை நல்லத்துக்குடி ஊராட்சியில் பறக்கும்படை அலுவலர் விஜயராகவன் தலைமையில் சிறப்பு எஸ்ஐ., குணசேகரன், காவலர் மணிகண்டன் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மயிலாடுதுறை பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமியை ஆதரித்து அவ்வழியே ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து சென்ற வாகனத்தை சோதனை செய்ததில், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் வாகன அனுமதி ஆணை இல்லாதது தெரியவந்தது.
இது குறித்து வாகன ஓட்டுநர் முத்துராமனிடம் விசாரணை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி பிரச்சாரம் மேற்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஜயராகவன் கைப்பற்றி மயிலாடுதுறை போலீசில் ஒப்படைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu