துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் தன்னார்வலர்களுக்கு பரிசு

துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில்  தன்னார்வலர்களுக்கு  பரிசு
X

துபாயில் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் ஈமான் தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.துபாய் தேரா லேண்ட் மார்க் கிராண்ட் ஹோட்டலில் ஈமான் தலைவர் ஹபீபுல்லா காக்க, ஈமான் பொதுச்செயலாளர்ஹமீது யாசின் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளாக் துலிப் ஜனாப் எஹ்யா சமூக ஆர்வலர் ஆயப்பாடி முஜிபுர்ரஹ்மானுக்கு துபாய் ஈமானின் தன்னார்வல பணிகளுக்கான நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி ராம்குமார், மனிதநேய பண்பாளர் பிளாக் துலிப் எஹ்யா , வெஸ்ட்டன் மோட்டார்ஸ் கமால் காக்க , ஆடிட்டர் பிரின்ஸ் இளவரசன், சமூக ஆர்வலர் யாஸ்மீன், அபுதாபி தமிழ் சங்கம் நிர்வாகிகள் மற்றும்எழுத்தாளர்கள், கவிஞர்கள் , மனிதநேயர்கள் ரேடியோ வர்ணனையாளர்கள் சாரா, அஞ்சனா , ராம் விக்டர், ஆசிப் மீரான், சசிகுமார், அமீரக பொறுப்பாளர் கமால் கே.வி, தமிழ் யூடியூப் ராவூப் மற்றும் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்