செம்பனார்கோவிலில் பெரியார் சிலைக்கு தி.மு.க. வினர் மாலை அணிவிப்பு

செம்பனார்கோவிலில் பெரியார் சிலைக்கு தி.மு.க. வினர்  மாலை அணிவிப்பு
X

செம்பனார் கோவிலில் பெரியார் சிலைக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

செம்பனார் கோவிலில் தி.மு.க.வினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

.தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்செல்வன், சித்திக், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!