தரங்கம்பாடியில் தி.மு க. உள்கட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்

தரங்கம்பாடியில் தி.மு க. உள்கட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்
X

தரங்கம்பாடியில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தி.மு க. உள்கட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக வார்டு உறுப்பினர்கள் உள்கட்சி தேர்தலுக்கான கூட்டம் பொறையார் கலைஞர் அரங்கத்தில் பேரூராட்சி அவைத்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது .

கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் எம் அப்துல் மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம். சித்திக் ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர் செம்பனார்கோவில் ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், தரங்கை பேரூராட்சி தலைவர் சுகண சங்கரி ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேரூராட்சி வார்டு பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார் இதில் ஏராளமான தி.மு.க மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி