மயிலாடுதுறையில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
X

மயிலாடுதுறையில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில் உள்ள சின்னக்கடை வீதியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் , கழக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கையினை பொதுமக்களிடம் எடுத்துரைத்து கழக முன்னோடிகள் சிறப்புரையாற்றினர். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடித்தந்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

பின்னர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் , தலைமை கழக பேச்சாளர் இளந்தளிர் இளங்கோ , தேர்தல் பணிக்குழு செயலாளர் பி.கல்யாணம் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தயார் செய்திருந்தார்.

Tags

Next Story
ai healthcare technology