திக் திக் மயிலாடுதுறை: நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் தேர்வு

திக் திக் மயிலாடுதுறை:  நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் தேர்வு
X

மயிலாடுதுறை நகரமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வராஜ் 

மயிலாடுதுறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர் குண்டாமணி என்கிற என்.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 35 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 24, காங்கிரஸ் ஒன்று, மதிமுக ஒன்று, அதிமுக 7 பாமக 2 ஆகிய இடங்களை கைப்பற்றின.

இதையடுத்து மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றுவது உறுதியானது. அதேசமயம் தலைவருக்கான பதவிக்கு திமுகவில் இருதரப்பினர் முனைப்பு காட்டியதால் கடும் போட்டி நிலவியது. திமுக கட்சி சார்பில் மயிலாடுதுறை திமுக நகர செயலாளராக உள்ள குண்டாமணி என்கிற செல்வராஜ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின் முடிவில் மொத்தமுள்ள 35 வாக்குகளில் 18 வாக்குகள் குண்டாமணி செல்வராஜுக்கு விழுந்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட லிங்கராஜனுக்கு அதிமுக உறுப்பினர்கள் அளித்த வாக்குகளையும் சேர்த்து 16 வாக்குகள் கிடைத்தன. ஒரு செல்லாத வாக்கு பதிவானது. இதையடுத்து தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லிங்கராஜனைவிட 2 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்