மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டிஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அடுத்த பொறையாரில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் இல்லத்தில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஜனநாயக நடவடிக்கையை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நரேந்திர மோடி அரசில் கேஸ் விலை, பெட்ரோல் விலை, பொருளாதார சீரழிவு, அரசு பொதுத்துறை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களை கண்டித்து வீடுகள் தோறும் கருப்புக் கொடிகள் கட்டி போராட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி என் ரவி, தரங்கை நகர செயலாளர் வெற்றிவேல் மற்றும் கழக நிர்வாகிகள் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!