தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
X

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக 14-வது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக 14-வது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் மூன்று வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 வேட்பாளர்களுக்கு கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 15-வார்டுகளிலும் திமுக உறுப்பினர்களே வெற்றி பெற்று கடந்த 2 ஆம் தேதி பதவியேற்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு 14-ஆவது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி மற்றும் 5-வது வார்டு அதிமுக உறுப்பினர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் அதிமுக வார்டு உறுப்பினர் தாக்கல் செய்த மனுவை முன்மொழிந்தும், வழிமொழிய ஆள் இல்லாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, 14-வது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் உறுதி செய்யப்பட்டார். இதையடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சுகுணசங்கரிக்கு திமுகவினர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!