குத்தாலம் ஒன்றிய இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்

குத்தாலம் ஒன்றிய இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்
X

குத்தாலம் ஒன்றிய இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ராக்கெட் ரமேஷ் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியம் வார்டு எண் 15 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ராக்கெட் ரமேசை ஆதரித்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க பொருளாளருமான நிவேதா எம்.முருகன் திறந்தவெளி வாகனத்தில் வீதி,வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ராமலிங்கம், நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எம்.சித்திக், ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், முருகப்பா மற்றும் தி.மு.க. கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!