கரும்புச்சாறு பிழிந்து திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கரும்புச்சாறு பிழிந்து திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகன் தொழுதலாங்குடி, தேரழுந்தூர், மேலையூர், சென்னியநல்லூர், திருவாவடுதுறை, மாதிரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். மேலும், பல்வேறு இடங்களில் நடந்து சென்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். தொழுதலாங்குடி கிராமத்தில் கரும்புச்சாறு கடை வழியே நடந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் நிவேதா முருகன், பொதுமக்களுக்கு கரும்புச் சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, தேரழுந்தூர் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு சென்று அங்கு தொழுகையை முடித்து வந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமிய சகோரர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future