மயிலாடுதுறையில் தி.மு.க . கூட்டணி கட்சிகள் ரயில் மறியல் போராட்டம்

மயிலாடுதுறையில் தி.மு.க .  கூட்டணி கட்சிகள்   ரயில் மறியல் போராட்டம்
X

மயிலாடுதுறையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து, தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க கோரியும் மயிலாடுதுறை அருகே மாப்படுகை ரயில்வே கேட் தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மற்றும் தொ.மு.ச.,சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும், திருநங்கைகள் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்த மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை கல்லணை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாப்படுகை ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இந்த மறியல் போராட்டம் நடை பெற்றதால் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் ரயில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!