மயிலாடுதுறை அருகே மணல் எடுத்த பள்ளத்தில் விளையாடிய சிறுவன், மண் சரிந்து பலி

மயிலாடுதுறை அருகே மணல் எடுத்த பள்ளத்தில் விளையாடிய சிறுவன், மண் சரிந்து பலி
X

வாய்க்காலில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் பள்ளத்தை மூடாததால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி  அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் மணல் எடுத்த பள்ளத்தில் விளையாடிய சிறுவன் மண் சரிந்து உயிரிழந்தார். அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா நச்சினார்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்லதுரை மகன் தீபக்(11) 6ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன்கோயில் பின்புறம் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார்.

அருகில் உள்ள சிற்றாறு வடிகால் வாய்க்காலில் மணல் எடுத்த பள்ளத்தில் தீபக் விளையாடி கொண்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டு சிறுவன் பள்ளத்தில் விழுந்து மண்சரிவு சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிசென்று தீபக்கை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் தீபக் உடலை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். வாய்க்காலில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் பள்ளத்தை மூடாததால் சிறுவன் உயிரிழந்ததோடு இது குறித்து வருவாய் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!