மயிலாடுதுறை அருகே கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
X

மயிலாடுதுறை அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்டஆட்சியர் லலிதா பங்கேற்றார்.

மயிலாடுதுறை அருகே கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா பங்கேற்று உரையாற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி இணை இயக்குனர் முருகண்ணன், ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதாமுருகன் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேசுகையில் கிராமசபை கூட்டங்களில் பெண்கள் அதிக அளவில் வந்துகலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஆண்கள் பெயரளவிற்கு கூட கலந்துகொள்ளவில்லை. கிராமசபை என்பது தங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து தீர்வுகான்பதற்காக நடத்தப்படுகிறது. அடுத்தடுத்த கிராம சபை கூட்டங்களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் நமது கிராமத்தில் அரசின்சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது. அந்த திட்டங்கள் குறித்து பெண்கள் அறிந்துகொண்டு அவற்றை பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்திகொள்ள வேண்டுமென்பதை அறிந்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திகொள்ள வேண்டும் என்றார்.

Tags

Next Story