மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் வழங்கல்

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் வழங்கல்
X
மயிலாடுதுறையில் ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கத்தினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்,

மயிலாடுதுறை கடைவீதியில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தி ஜேசிஜ மயிலாடுதுறை டெல்டா சங்கத்தினர் கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் கடைவீதியில் செல்லும் பாதசாரிகளுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்தி பொதுமக்களுக்கு முக கவசமும் வழங்கினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!