மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி துவக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு தூர்வாரும் பணி 2022-ன்கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, நன்டலாறு, மண்ணியாறு, புது மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு, பாலாறு மற்றும் தெற்குராஜன் ஆறுகளில் பிரியும் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தரங்கம்பாடி தாலுகா பாலூர் கிராமத்தில் புத்தாகரம் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில்ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் 862.25கி.மீட்டர் தூரம் 49 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்திலேயே தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும், தூர்வாரும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் விவசாயிகள் அடங்கிய 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். மேலும் விடுபட்ட தூர்வாரும் பணிகளை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ம் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu