தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்: மே.22ல் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம்

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்: மே.22ல் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம்
X

தருமபுர ஆதீனம் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தருமபுர ஆதீனம் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ திருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா நடைபெறும்.

பெருவிழாவை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி காலை ஆதின கர்த்தர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். தேரினை தருமபுர ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் தேரினை வடம்பிடித்து தொடங்கிவைத்தார் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது தருமபுரம் ஆதினத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. மேலும், விழா நிறைவாக 11ம் நாளாக 22 ஆம் தேதி ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெற உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!