தருமபுரம் ஆதீனம் குரு லிங்க சங்கம ஞான ரத யாத்திரைக்கு புறப்பட்டார்
தலையில் லிங்கத்தை சுமந்தபடி ரதயாத்திரை புறப்பட்டார் தருமபுரம் ஆதீனம்.
மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் கும்ப ராசிக்கு உரிய நதியான துங்கபத்ரா நதியில் துங்கபத்ரா மகா புஷ்கர விழா நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனமான தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அங்கு நடைபெறும் நிறைவு நாள் விழாவில் புனித நீராடுகிறார்.
இதற்காக தருமபுரம் ஆதீன மடத்திலிருந்து அவர் குரு லிங்க சங்கம ஞான யாத்திரையாக புறப்பட்டார். முன்னதாக ஆதீன பூஜை மடத்தில் அவர் சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் சொக்கநாதப் பெருமானின் திருவுருவத்தை தலையில் சுமந்து ஞான ரதத்தில் எழுந்தருளி யாத்திரை புறப்பட்டார். வழியெங்கும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தருமபுரம் ஆதீனகர்த்தருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu