தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி கோரி திருமுறைகளை ஓதி விண்ணப்பம்

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி கோரி  திருமுறைகளை ஓதி விண்ணப்பம்
X

பட்டண பிரவேசத்திற்கு அனுமதி கோரி சிவனடியார்கள் கூட்டம் திருமறை ஓதி விண்ணப்பம் செய்தனர்.

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி கோரி திருமுறைகளை ஓதி சிவனடியார் கூட்டம் விண்ணப்பம் செய்தது.

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கக்கோரி தருமபுரம் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரிய பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடைவிதித்திருப்பதை திரும்பப் பெறக்கோரி ஆதீன பட்டணப்பிரவேசம் மீட்புப் போராட்டம் என்று தருமபுரம் ஆதீன சிவனடியாளர்கள் திருக்கூட்டத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஓதுவாமூர்த்தி முருகன், அமிர்கடேசன், ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க மாவட்ட தலைவர் கணேச சிவாச்சாரியார், ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் பண்ணை சொக்கலிங்கம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், ஓதுவார்கள் திருமுறைகளை பாடி, பட்டணப்பிரவேச நிகழ்வை சிறப்பாக நடத்தித்தர மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Next Story
ai marketing future