கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி ஆசி கூறினார் தருமபுரம் ஆதீனம்

கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி ஆசி கூறினார் தருமபுரம் ஆதீனம்
X

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டின் 7-வது மாத விழாவில் தருமபுரம் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்கள்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டின் 7-வது மாத விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி அருளாசி கூறினர்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டு இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் பவள ஆண்டின் 7-வது மாத விழா நடைபெற்றது. இக்கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கள் 100 பேருக்கு இலவச தையல் பயிற்சி அளித்து, அவர்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று நடைபெற்ற விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி அருளாசி கூறினர். இவ்விழாவில், திருச்சி சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ, மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றினார். இதில், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai automation in agriculture