/* */

தருமபுர ஆதீனம் மறைந்த ஆதீனகர்த்தர்கள் குரு மூர்த்த கோபுர கலசங்கள் திருட்டு

மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் மறைந்த ஆதீனகர்த்தர்கள் குரு மூர்த்தத்தில் ரூ50 ஆயிரம் மதிப்பிலான 5 விமான கோபுர கலசங்கள் திருட்டு

HIGHLIGHTS

தருமபுர ஆதீனம் மறைந்த ஆதீனகர்த்தர்கள் குரு மூர்த்த கோபுர கலசங்கள் திருட்டு
X

தருமபுர ஆதீன கோபுர கலசங்கள் திருடு போயின 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் காவிரிக்கரை செல்லும் திருமஞ்சன வீதியில் ஆதீனகர்த்தர்களாக இருந்து மறைந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட குருமூர்த்தம் எனும் நினைவிடம் அமைந்துள்ளது.

இந்த குருமூர்த்தத்தில் கடந்த 2-ஆம் தேதி 20-வது குருமகாசன்னிதானத்திற்கு குருபூஜை நடந்துள்ளது. அதன்பின்னர் மறுநாள் ஆதீன ஊழியர்கள் அங்கு சென்றபோது குருமூர்த்தத்தின் விமானத்திலிருந்த 1 கலசங்கள், முகப்புப் பகுதியில் உள்ள நுழைவாயிலின் மேல் பகுதியில் இருந்த 4 கலசங்கள் என மொத்தம் 5 கலசங்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

செம்பு மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த 5 கலசங்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆதீனத்தின் பொதுமேலாளர் கோதண்டராமன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 May 2022 3:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு