வைத்தீஸ்வரன் கோயில் தை உத்ஸவ தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

வைத்தீஸ்வரன் கோயில் தை  உத்ஸவ தேரோட்டத்தில்  பக்தர்கள் திரளாக பங்கேற்பு
X
தை உத்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் தை உத்ஸவ தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது, இங்கு செல்வ முத்துக்குமார சுவாமி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் என தனித்தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர், இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வருடாந்திர தை செவ்வாய் உத்ஸவம் கடந்த முப்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, நாள்தோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம் ,காமதேனு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது, முன்னதாக வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது, தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்வமுத்துக்குமாரசாமி எழுந்தருளினார், தொடர்ந்து கோவில் தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார், தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலவீதி வடக்குவீதி கீழவீதி திடீரென வழியாக சென்று கோவிலை வலம் வந்தது.

Tags

Next Story
ai solutions for small business