மயிலாடுதுறை நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் நடந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் நடந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஆராயத் தெருவில் நகராட்சி மூலம் டெங்கு விழிப்புணர்வு நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின்பேரில் நகர் நல ஆய்வாளர் டக்டர் மலர்மன்னன் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் இராமையன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், வீட்டில் டெங்கு கொசு வளரும் டயர் , தேங்காய் சிரட்டை, ப்ளாஸ்டிக் பொருட்கள் இவைகளை அப்புறப்படுத்தவும்' குடிநீர் தொட்டிகளை மூடி பராமரிக்கவும் விழிப்புணர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களும், நகராட்சி சுகாதார பணியாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று விழிப்புணர்வு செய்தனர். இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!