நிழலில்லா நாட்கள் குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு செயல் விளக்கம்

நிழலில்லா நாட்கள் குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு செயல் விளக்கம்
X

நிழலில்லா நாட்கள் பற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியை செயல்விளக்கம் அளித்தார்.

மயிலாடுதுறை அருகே நிழலில்லா நாட்கள் குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் கதிர்கள் பூமியில் நேர் குத்தாக விழுகின்றது. அப்போது நமது நிழல் நமது காலடிக்குள் அடங்கிவிடும். இதனால் 30 வினாடிகள் வரை நிழல் நம் கண்ணுக்குத் தெரியாது.வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதனை அடுத்து இந்த இரண்டு நாட்களும் நிழலில்லா நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.

12 மணிக்கு துவங்கி 30 வினாடிகள் சூரியன் கதிர்கள் நேராக விழுவதால் நமது நிழல் வெளியில் விழாமல், இருக்கும். இதற்கு நிழலில்லா நாட்கள் என்று பெயர். இதுகுறித்து மணல்மேடு அருகே தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அறிவியல்பூர்வமான விளக்கங்களை மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விளக்கிக் கூறினர்

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி