15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மயிலாடுதுறையில் தேசிய தமிழர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தமிழர் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் ஹாஜி முகமது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் கணேசன் மனித உரிமைக் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கும், இறந்தவர்களை பிரேதபரிசோதனை செய்வதற்கும் என லஞ்சம் கேட்கும் மருத்துவமனை ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும், மயிலாடுதுறை நகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாள சாக்கடையை சீர் செய்து பராமரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கோயில்கள் மற்றும் மடத்து இடங்கள் அரசு புறம்போக்கு இடங்களில் பூர்வீகமாக குடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும், பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!