பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசியரியர் பணிநிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் அசோக்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் பணி நிரவலின் போது கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி பணி நிறைவு செய்யப்பட்டவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும் உடனடியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை வழங்கிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இல்லையென்றால் ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ வை மீண்டும் கூட்டி மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் தொவித்தனர். இதில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu