சீர்காழி அருகே தொழிலாளியின் மரணத்தை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்க கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்கு நிம்மேலி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன்(42) என்பவர் வேலை செய்தார்.
கடந்த 17-ஆம் தேதி சூளையிலேயே மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக சீனிவாசனின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேரை திருவெங்காடு போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் உள்ளூர் மருத்துவர்களை கொண்டு உடற்கூறாய்வு செய்யக்கூடாது, உடற்கூறு ஆய்வின்போது தங்கள் சார்பு வழக்கறிஞர் ஒருவர் கண்காணிப்பில் வீடியோ பதிவு செய்ய வேண்டும். கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைளை வலியுறுத்தி ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தை கிராம மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் நடத்தி வருகின்றனர.
6வது நாளான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் மேகநாதன் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யவேண்டும். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu