சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

சீர்காழி ரெயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ரயில்நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கம்,வணிகர்கள், விவசாயிகள், மாற்று திறனாளிகள் அனைத்து கட்சியினர், மற்றும் பொதுமக்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் தொடங்கிய கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்நிலையத்தில் இரு மார்க்கங்களிலும் பல்வேறு விரைவு ரயில்கள் நின்று சென்று வந்தன.கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 13க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சீர்காழியில் நின்று செல்வதில்லை.

இதனால் வணிகர்கள்,மாணவ,மாணவிகள்,விவசாயிகள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும், பாதிக்கப்பட்டு வருவதாகவும், சில விரைவு ரயில்களில் செல்ல வேண்டும் என்றால் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மயிலாடுதுறை அல்லது சிதம்பரம் ரயில் நிலையம் சென்று ரயிலைப் பிடிக்கும் அவல நிலை தொடர்வதாகவும் குற்றஞ்சாட்டினர். அதனால் தென்னக ரயில்வே இனியும் தாமதிக்காமல் சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சீர்காழியில் கடையடைப்பு போராட்டம் நடத்தி ரயில் மறியல் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்துவோம் என ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தினை யொட்டி சீர்காழி ரயில் நிலையம் முன்பு சீர்காழி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Tags

Next Story