மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தமிழருக்கே வேலை என்று ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தமிழருக்கே வேலை என்று ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 940 அஞ்சல் பிரிப்பர் என்ற பணியிடங்களை தமிழ்நாட்டுக்கு நிரப்பியதில் 900 பேர் வட இந்தியர்களை மட்டுமே நியமித்துள்ளது. இதேபோல், மத்திய அரசு அலுவலகங்களான ரயில்வே, வருமான வரித்துறை, அஞ்சல்துறை, ஜிஎஸ்டி போன்ற அலுவலகங்களில் வட இந்தியர்களே அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதனைக் கண்டித்தும், தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழருக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story